Translate

Saturday, 6 July 2013

சுண்ட வத்தக்குழம்பு


சுண்ட வத்தக்குழம்பு


தேவையான பொருட்கள் ;
காய்ந்த சுண்ட வத்தல் - ஒரு கைபிடியளவு
நல்ல எண்ணெய் - 100 மில்லி + 2 டேபிள்ஸ்பூன்
முழுமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு - அரைடீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6-8
கடுகு - கால்ஸ்பூன்
வெந்தயம் - கால்ஸ்பூன்
கடலை பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிள்காய்த்தூள் - அரைடீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு பெரிய பல் -3
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு



முதலில் வெறும் வாணலியில் மல்லி,சீரகம்,மிளகு,கடுகு,வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுக்கவும்.ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்,அதிலேயே பாதி சுண்டவத்தலை(15-20) வறுத்து எடுத்து அரைக்க எடுத்து வைக்கவும்.பாதியை குழம்பில் போட வைக்கவும்,இதனில் பாதி சுண்ட வத்தலையும் சேர்த்து அரைப்பதால் குழம்பு காரம்,கசப்பு,புளிப்பு என்று சுவை அருமையாக இருக்கும்.



பின்பு அதே வாணலியில் பூண்டு,கருவேப்பிலை வறுத்து அத்துடன் அணைத்து பொருளையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி ஆறவைக்கவும்.



புளியை ஊறவைக்கவும்.வறுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.




புளிக்கரைசலோடு அரைத்தவற்றை சேர்த்து கரைத்து தேவைக்கு உப்பு சேர்த்து வைக்கவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு பாதி சுண்டவத்தலை எண்ணெயில் போட்டு பொரிய விடவும்.


சுண்ட வத்தல் பொரியவும் அரைத்த விழுது புளிக்கரைசலை சேர்க்கவும்.


நன்கு கொதி வரும்,சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் வற்ற விடவும்.



குழம்பு வற்றி இப்படி வரும்.


குழம்பு சிவப்பாய் பார்க்க அழகாய் இருக்க ஒரு தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காயவும் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து உடன் ரெடி ஆன வத்தக்குழம்பில் கொட்டி கலந்து விடவும்.நன்கு கலந்து விடவும்.


சுவையான சூப்பரான வத்தக்குழம்பு ரெடி.

Transposing Rows to columns without aggregation and Displaying column header as First column In sql server 2008(pivot)


swap the N rows to columns without aggregation function in sql server 2008

CREATE TABLE testing1(Spot_dt date, Costed INT, celldata INT)

INSERT INTO testing1 (Spot_dt,Costed,celldata) values ('2012-04-08',1,15);
INSERT INTO testing1 (Spot_dt,Costed,celldata) values ('2012-04-15',1,24);
INSERT INTO testing1 (Spot_dt,Costed,celldata) values ('2012-04-22',1,36);

select * from testing1


Spot_dt      Costed celldata
2012-04-08 1           15
2012-04-15 1           24
2012-04-22 1           36

DECLARE @cols AS NVARCHAR(MAX), @query  AS NVARCHAR(MAX)


select @cols = STUFF((SELECT distinct ',' + QUOTENAME(Spot_dt)
                    from testing1
            FOR XML PATH(''), TYPE
            ).value('.', 'NVARCHAR(MAX)')
        ,1,1,'')

set @query = 'SELECT valtype dates, ' + @cols + '
              from (select Spot_dt, Costed, CellData from testing1) as x
              unpivot (vals for valtype in (Costed, celldata)) as u
              pivot (min(vals) for spot_dt in (' + @cols + ')) as p'

execute(@query)


dates 2012-04-08 2012-04-15 2012-04-22
CellData     15               24               36
Costed       1                 1                 1